000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கலிய நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a விடையார் கோயிலுக்கு விளக்கெரித்த எண்ணெய் வினைஞர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் செக்குத் தொழிலை உடைய எண்ணெய் வணிகர் மரபில் தோன்றியவர் கலிய நாயனார். செல்வந்தராகிய கலியர் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு விளக்கிடும் பணியை குறைவறாது செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை உலகுக்குப் புலப்படுத்த திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் கலியரின் செல்வ நிலையை குறைய வைத்தார். பின் கலியர் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்ய கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தன் மனைவியையும் விற்பதற்கு நகரெங்கும் விலை கூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்து, திருவிளக்கேற்றும் வேளையில ஒற்றியூர் அடைந்து, திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்து விடுவேன் எனத் துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்கு உறுதி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர் பெருமான் தனது அருட்கரத்தால் அதனை தடுத்து வீடு பேறளித்தார். இச்சிற்பக் காட்சியில் கலிய நாயனார் மாடுகளை செக்கில் பூட்டி எண்ணெய் ஆட்டிப் பிழியும் பணியைச் செய்கிறார். செக்கில் எண்ணெய் ஆட்டுதல் பழந்தமிழரின் தொழில் நுட்ப முறைகளுள் ஒன்றாகும். அந்தக் காலத்தில், மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை ஆட்டினார்கள். காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து போனதாலும், மர செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. இப்படி மர செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். கல் செக்குகளும் தமிழகத்தில் பரவலாகக் கல்வெட்டுகளுடன் காணக் கிடைக்கின்றன. |
653 | : | _ _ |a கலிய நாயனார், கலியன், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000341 |
barcode | : | TVA_SCL_000341 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |